recent posts...

Tuesday, February 28, 2012

லக்கிலுக் -aka- யுவகிருஷ்ணாவின் டாப் 5 பதிவுகள்

பொழுதுபோகவில்லை என்றால், டமில்சினிமா.கொம்'க்கு  அடுத்த படியாய், நான் ப்ரவுசரில் தட்டுவது luckylookonline.com என்ற உரலைத் தான். அப்பாலிக்கா, தினகரன், csm-fanaa.blogspot.com, thehindu.com, ndtv.com, news.google.com என பட்டியல் இருக்கும்.

லக்கிலுக் (யுவகிருஷ்ணா) சுவாரஸ்யமான விஷயங்களை, சுவாரஸ்யமாக எழுதுவதில் தேர்ந்தவர். பொழுதுபோக்கு விஷயங்கள் மட்டுமல்லாமல், புதிய தலைமுறைக்காக எழுதப்படும் நல்ல கருத்துக்களும், மாறி மாறி வருவது, அவர் பக்கத்தின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பை அப்படியே தக்க வைத்துள்ளது. எப்ப உரலைத் தட்டினாலும், ஏதாவது புதிய மேட்டர் மினிமம் கேரண்ட்டியுடன் வாசிப்புக்கு ரெடியாக இருக்கும்.

ப்ளாகர் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களின் டாப்பு பதிவுகளை கண்டறியலாம் என்று பதிந்தபோது, அவரின் டாப்பு 5 பதிவுகளாய் இவற்றைத் தெரிவித்திருந்தார். 1/5 விகிதாச்சாரத்தில், கில்ஃபான்ஸும், நல்ல மேட்டரும் டாப்பில் இருப்பது அவர் பிழையல்ல, அது நமது மன வக்கிரத்தின், அளவுகோல் :)

லக்கி, படிப்படியா, எங்கேயோ போயிக்கிட்டு இருக்கீங்க. தொடர்ந்து கலக்குங்க.

சவிதா அண்ணி!
Aug 27, 2009, 32 comments
43,419 Pageviews

நடுநிசி நாய்கள்!
Feb 19, 2011, 53 comments
12,447 Pageviews

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!
Sep 5, 2011, 77 comments
11,404 Pageviews

ஷகீலா
Jul 25, 2009, 6 comments
7,910 Pageviews

சரோஜா தேவி!
Jan 1, 2011, 51 comments
5,745 Pageviews

Monday, February 20, 2012

சென்னையின் விலைவாசி ஷாக்

எல்.கே.ஜி முதல், கல்லூரிப் படிப்பு வரை படிச்சு கிழிச்சு தொயச்சு ஆறப்போட்டது சென்னையில்தான்.
ஆணி பிடுங்க ஆரம்பிச்சதும் கூட  சென்னையில் தான்.
பெரிய வசதி வாய்ப்பில்லன்னால்லும், குடும்ப கஷ்ட நஷ்டங்களெல்லாம் தெரியாம, 'சுகவாசி'யாத்தான் வாழ்ந்து பழகியிருந்தேன்.
ஆனா, 'பாக்கெட்டு' மணியெல்லாம் வைத்திருந்ததில்லை.

சைக்களில் காத்து போச்சுன்னா, அடிக்கரதுக்கு, எட்டணாவும், வெயில் காலத்துல மயக்கம் வந்தா ஜோடா வாங்கிக் குடிக்க பழைய ரெண்டு ரூபாவும் மட்டுமே கையில் இருக்கும். பஸ்ஸுக்கும் ரயிலுக்கும், மாதாந்திரப் பாஸு/டோக்கன் மட்டுமே.

தம்ஸ்-அப்பு, நாயர் கடை டீ, பட்ஸ் பாவ் பஜ்ஜி, ஸெட் தோசையெல்லாம் வாங்கிக் கொடுக்க, நட்பு வட்டாரம் பெருசா இருந்தது.
வூட்டுக்கு தெரியாம, டாட்டா சியெரா காரு வாங்கர அளவுக்கு, பசையான பயலுவ கும்பலில் இருந்தார்கள்.

ஊரில் இருந்தவரை, ஒரு ரூபாய்க்கு டீயும், ரெண்டு ரூபாய்க்கு ஸ்பெஷல் டீயும், ஏழு ரூவாய்க்கு தாம்பரம் பட்ஸில் பாவ் பஜ்ஜியும், பத்து ரூவாய்க்கு பரோட்டா சால்னாவும் கிட்டியதாய் ஞாபகம். அன்லிமிட்டட் மீல்ஸ் கூட முப்பது ரூபாய் இருந்திருக்கும்.
இது தொண்ணூறுகளின் நடுவில்.

முதல் வேலை கிட்டியதும், பயலுவளை, தாம்பரம் பட்ஸுக்கு கூட்டிக் கொண்டு போய், அன்லிமிட்டட் மீல்ஸ் வாங்கி கொடுத்து, கடமையை ஆற்றினேன்.

சிங்கப்பூரில் வேலை கிட்டியதும், அந்த வருட விடுமுறையில் வரும்போது, பக்கத்தில் இருக்கும் குட்டி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் போய், பஃபே வாங்கிக் கொடுத்து கடமையை ஆற்றினேன். ஒரு ஆளுக்கு, நூறு ரூபா கிட்ட இருந்தது. அதுக்கு துட்டை அழும்போதே, இவ்ளோ போதான்னு ஒரு கலக்கம் வந்துடுச்சு. இருந்தாலும், கடமை முக்கியமாச்சேன்னு எடுத்து வுட்டேன்.

அமெரிக்கா வந்ததும், ஒவ்வொரு வருட விடுமுறையில் நட்பு வட்டாரத்தை இட்டுச் செல்லும் இடத்திற்கு, "நட்சத்திரம்" ஏறிக் கொண்டே போனது. 2 ஸ்டார், 3 ஸ்டார் ஆகி, 3 ஸ்டார், 4 ஸ்டார் ஆகி, ஆகி, இப்ப ஏழு ஸ்டாரில் வந்து நிக்குது. ஐநூறு ரூபாய்க்கு முடிந்த கடமை ஆற்றல், இப்பெல்லாம் சில பல ஆயிரங்கள் ஆவுது.

விடுமுறையின் போது, இருக்கும் மூணு நாலு வாரத்தில், அதிகமாய் மற்ற விஷயங்களை அலசி ஆராய நேரம் இருக்காது. விலைவாசியெல்லாம் ஏறுதுன்னு  படிப்பதோடு சரி. எங்க போனாலும், ஆட்டோக்காரனும், கால் டாக்ஸி காரனும், ஐநூறு ரூபாய் நோட்டை வாங்கிக் கிட்டு, மிச்சம் தரலாமா வேணாமான்னு யோசிக்கர அளவுக்கு, பெட்ரோல் விலை ஏற்றம் ஆனது தெரிந்திருந்தது.

ஆனா, சிங்கிள் டீ, இன்னும் ஒரு ரூபாயாத்தான் இருக்கும், பஸ்ஸுக்கு குறைஞ்ச கட்டணம் இன்னும் எட்டணாவாத்தான் இருக்கும், உள்ளூர் மெட்ரோ ரயிலில் ரெண்டு ரூபாய்க்கு டிக்கெட் கிடைக்கும்னு உள்ளுக்குள்ள ஒரு நம்பிக்கை இருந்தது. அதுவும் ஏறிடுச்சுன்னு தெரிஞ்சுக்க, வாய்ப்பு பெருசா அமைந்ததில்லை. வேற யாராவது உடன் இருப்பார்கள். கொடுக்கல் வாங்கலை அவங்க பாத்துப்பாங்க என்பதால் அப்படி.

சென்ற விடுமுறையின் போது, குடும்பத்தோட சொந்த ஊருக்கு போயிட்டு, நான் தங்க்ஸ் மட்டும் தனியா சென்னைக்கு வர, மத்தவங்களெல்லாம் வேறு சில ஊர்களுக்கு விசிட் முடிச்சிட்டு சென்னைக்கு வரதா ப்ளான்.
வீட்டுக்கு வந்ததும் அகோரப் பசி. சமையல் எல்லாம் பண்ண நேரம் பத்தாது, பக்கத்துல தான் செட்டிநாடு உணவகம் ஒண்ணு இருக்கு, போயி எத்தையாவது வாங்கிட்டு வந்துடுன்னு தங்க்ஸ் சொன்னதைக் கேட்டதும், பைக்கை உதைத்து ஸ்டார்ட்டி விட்டு, உணவகம் வந்தடைந்தேன்.
ரெண்டு பேருக்கு, இரு நூறு ரூபாய் போதும்னு, கையில ரெண்டு நூறை எடுத்டு ஜோபீல போட்டுட்டு இந்தப் புறப்பாடு.

செட்டிநாட்டாரிடம் மெனுவை வாங்கி ஆர்டர் பண்ணலாம்னு பாத்தேன். நல்ல ஒரு பெப்பர் சிக்கனும், ஒரு பிரியாணியும், சால்னாவும், நாலு பரோட்டாவும் வாங்கிக்கிட்டா திவ்யமா கொண்டு போயி சாப்பிட்டா பிரமாதமா இருக்குமேன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டே, மெனுவை மேஞ்சு, ஆர்டன் பண்ணேன். நாணூத்தி சொச்சம் கொடுங்க சாருன்னு சொன்னான்.

திடுக்னு ஆயிருச்சு. 'பட்ஸ்' கணக்கு போட்டா, கிட்டத்தட்ட 120க்குள்ள வரும்னு நெனச்சிருந்த எனக்கு, நாணூறைக் கேட்டதும், தூக்கி வாரிப் போட்டுருச்சு.
மெனுவை வாங்கி விலையைப் பாத்தா, ஒரு பிரியாணி 160ரூ, ஒரு பரோட்டா 18ரூ, ஒரு பெப்பர் சிக்கன் 140ரூன்னு போட்டிருந்தான்.

18ரூ கொடுத்து ஒரு பரோட்டாவோ, 140 ரூ கொடுத்து தம்தூண்டு பெப்பர் சிக்கனோ வாங்க மனசும் வரலை, கையில் காசும் பத்தலை.

"ஓ, யூ நோ வாட். வெஜிடேரியன் டிஷ்ஷு என்னா இருக்கு?"ன்னு கேட்டு, காஞ்சுப் போன இடியாப்பத்தையும், தயிர் சாதத்தையும் வாங்கிக் கொண்டு போய் அன்றைய தினத்தை ஓட்டினேன்.
வழி நெடுக்க ஒரு திக் பிரமைதான். ஊருல என்ன நடக்குது? மிஞ்சி மிஞ்சி போனா, அஞ்சு ரூவாய் இருக்க வேண்டிய பரோட்டா, தாறு மாறா விலை ஏறிப் போயிருக்கே. எப்படி எல்லாருக்கும் கட்டுப்படி ஆகுது? அம்புட்டு விலை ஏற, அதுவும் ஏழு ஸ்டாரெல்லாம் இல்லை, சாதாரண உணவு விடுதிதான்.

நமக்குத்தான் பயக்கம் இல்லாததால கிலி ஆயிடுச்சா?
உள்ளூர் காரனெல்லாம், லெஃப்ட்டு கை கொடுக்கரதை, ரைட்டு கைக்கு தெரியாத அளவுக்கு விசுக் விசுக்னு எடுத்து தண்ணியா செலவு பண்றானாமே? ஐநூறு ரூவா நோட்டுக்கெல்லாம், ப்த்து ரூபா மாதிரிதான் மரியாதையாமே?
எங்கே செல்லும் இந்தப் பாதை..?


இஸ் இட்? ஹ்ம்!

Sunday, February 05, 2012

நாசர், ராசா பற்றி, ராசா, நாசர் பற்றி


இங்கு பதிந்ததன், ஒளிப்பதிவு கீழே.

நாசர் , ராசா பற்றி.





ராசா, நாசர் பற்றியும், மேலும் பலவற்றைப் பற்றியும், அட்டகாசமாய்...



Thursday, February 02, 2012

உங்களின் டாப்பு 5 பதிவுகள்?

ப்ளாகரில் பதிவு வைத்திருப்பவர்கள் அவர்களின் பதிவுகளை எத்தனை பேர் படிக்கறாங்கன்னு தெரிஞ்சுக்க, Blogger.com பக்கத்துக்கு போயி, Stats பாத்தா தெரிஞ்சுக்கலாம்.


http://www.blogger.com/blogger.g?blogID=9999999999#overviewstats
(9999999999 பதிலா,, உங்க blog Id போட்டுக்கங்க)

Stats பக்கத்துக்கு போயி, 'All Time''னு பாத்தீங்கன்னா,, உங்கள் பதிவுகளின் டாப்பு அஞ்சு எதுன்னு காட்டும்.

2009க்கு முன்னாடி எழுதின பதிவுகள் இதில் கணக்கில் கொள்ளப்படவில்லை.

நான் எழுதிக் கிழிச்சதுல, டாப்பு 5 இதுதானாம்.

எ..கொ.இ?

ரூம் போட்டு யோசிச்சு எழுதரதெல்லாம் லிஸ்ட்டுல காணும்.
கண்ண மூடிக்கிட்டு போடர மொக்கைகள் தான் எல்லாரையும் இஸ்க்குது.

வாசகர்களின் பல்ஸை புடிச்சுட்டேன், இனி எல்லாம் மொக்கையே :)

உங்க டாப்பு 5 எது?